சென்னை விமான நிலையத்துக்கு சிறந்த சுற்றுலா விருது தமிழக அரசு வழங்கியது

2017-18ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் பெற்று உள்ளது.

Update: 2018-03-16 22:30 GMT
ஆலந்தூர், 

தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதை சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் பெற்று உள்ளது. இதற்கான “சிறந்த சுற்றுலா நண்பன்” என்ற விருதை, சென்னை விமான நிலைய துணை இயக்குனர் ஸ்ரீவட்சவா, தமிழக அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்