கல்பாக்கம் அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
கல்பாக்கம் அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கல்பாக்கம்,
கல்பாக்கத்தை அடுத்த நல்லூர் தேரடி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 19). திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
தற்கொலை
இதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி கடந்த 13-ந்தேதி வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து உள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர் மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.