எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கலெக்டர் ஆய்வு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-03-16 22:15 GMT
திருவள்ளூர், 

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. திருவள்ளூரில் உள்ள ஸ்ரீலட்சுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர். இதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, பள்ளி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் ஆகியோர் இருந்தனர். 

மேலும் செய்திகள்