கர்நாடகத்திற்கு தனிக்கொடியை பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு வரைவு அறிக்கையை சித்தராமையா அனுப்பினார்
கர்நாடகத்திற்கு தனிக்கொடியை பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு வரைவு அறிக்கையை சித்தராமையா அனுப்பினார்.
பெங்களூரு,
கர்நாடகத்திற்கு தனிக்கொடியை பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு வரைவு அறிக்கையை சித்தராமையா அனுப்பினார். தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் பாடம் கற்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனிக்கொடி அறிமுகம்
கர்நாடக அரசு, கர்நாடகத்திற்கு என்று தனிக்கொடியை உருவாக்கியுள்ளது. அதில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு வண்ணங்களுடன் கர்நாடக அரசின் முத்திரை இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்திற்கு தனிக்கொடியை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கேட்டு மத்திய அரசுக்கு முதல்-மந்திரி சித்தராமையா வரைவு அறிக்கையை அனுப்பினார். இதுபற்றி சித்தராமையா தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகத்திற்கு தனிக்கொடி உருவாக்குவது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டது. அப்போது இதற்கு ஆங்கில ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாட்டின் ஒற்றுமைக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என்று விவாதங்களை நடத்தின. அந்த குழு தனது அறிக்கையை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசு கர்நாடக தனிக்கொடியை அறிமுகம் செய்துள்ளது.
சட்டத்தின் அட்டவணையில்...
1950-ம் ஆண்டு முத்திரை மற்றும் பெயர் சட்டத்தின் அட்டவணையில் கர்நாடகம் உருவாக்கியுள்ள இந்த கொடியை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகத்திற்கு தனிக்கொடியை பயன்படுத்தக்கூடாதா?, அவ்வாறு பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? என்று கன்னடர்கள் கேள்வி கேட்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்தபோது 1947-ம் ஆண்டு இந்தியா இளம் நாடாக இருந்தது. நமது நாடு மாநிலங்களை உள்ளடக்கிய வலுவான கூட்டமைப்பாக உருவானது.
இந்திமொழி திணிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. இதன் மூலம் பயனுள்ள பாடங்களை நாம் கற்றோம். பஞ்சாப், அசாம் போன்ற மாநிலங்கள் தன்னாட்சி அந்தஸ்து கேட்டு போராடின. அதில் இருந்தும் பாடம் கற்றோம். மண்டல அடையாளங்கள் மற்றும் பெரிய கூட்டாட்சி தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்று கேட்பதில் சீரற்ற நிலையை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை.
கர்நாடகம் பெருமைப்படுகிறது
கன்னடம் என்ற அடையாளத்தில் கர்நாடகம் பெருமைப்படுகிறது. நாங்கள் பல ஆண்டுகளாக மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ண கொடியை பயன்படுத்தி வருகிறோம். கூட்டாட்சி தத்துவத்தின் சில விஷயங்கள் எங்களின் தினசரி வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நன்கு வளர்ச்சி அடைந்த மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்கின்றன. ஆனால் இந்த மாநிலங்களுக்கு வரி பங்கீடு, அதைவிட குறைவாகவே கிடைக்கிறது.
மத்திய அரசு வரி வருவாயில் அதிக பங்குத்தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களிலும் கூடுதலாக நிதி வழங்க வேண்டும். வட மாநிலங்களின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் மானியம் வழங்குகின்றன. 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்இந்தியா மத்திய அரசுக்கு அதிக வரியை கொடுத்து குறைவான வரி வருவாய் பங்கை பெறுகின்றன.
தன்னாட்சி அதிகாரம்
மாநிலங்களுக்கு கூடுதலான தன்னாட்சி அதிகாரம் வேண்டும். பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துதல், கடன் வாங்குதல், கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், சொந்தமாக திட்டங்களை வகுத்தல் போன்றவற்றுக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும். நாட்டில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைந்துள்ளன.
இந்த மாநிலங்களின் மொழி, கலாசாரம் தான் இந்தியாவின் அடையாளம். ஆனால் இன்னும் பொதுவான வரலாறு, பொதுவான குடிமக்கள், பொதுவான விதியின்படி தான் நாம் அடையாளம் காணப்படுகிறோம். எனது அடையாளம் பெருமைமிகு கன்னடர் என்பதுதான். இது எனது பெருமைமிகு இந்தியன் என்ற அடையாளத்துடன் வேறுபட்டது கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.