நெல்லை மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிதி உதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
நெல்லை மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ரூ.3¼ லட்சம் நிதி உதவியை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
நெல்லை,

சாலை மேம்பாட்டு திட்டம்
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தில், நெல்லை– சங்கரன்கோவில் சாலை மற்றும் நாங்குநேரி– உவரி சாலைகளின் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இந்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் போது நிலம் எடுக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் மறுவாழ்வு மறுகுடியமர்வு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
மேலும் நிலம் வழங்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.
நிதி உதவி
இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, 6 பேர்களுக்கு ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் திருச்சி தனி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மறுவாழ்வு அலுவலர் அமுதா, சாலை மேம்பாட்டு திட்ட தாசில்தார் சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.