குரங்கணி காட்டுத்தீ விபத்தில் துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு விருது முதல்–அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தமிழக முதல்–அமைச்சருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார்.
தேனி,
குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளனர். பலர் தீக்காயம் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது குரங்கணி கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், போலீஸ் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவ குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், குரங்கணியை சேர்ந்த மரக்காமலை, காமராஜ், பாக்கியராஜ், சங்கர் உள்ளிட்ட தன்னார்வலர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஜெகதீசன், தேனியை சேர்ந்த டாக்டர் சி.பி.ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் துணிச்சலுடன் செயல்பட்டு பலரை உயிருடன் மீட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து துணிச்சலுடன் செயல்பட்ட இவர்களுக்கு தமிழக அரசு உரிய விருதும், ஊக்கத்தொகையும் வழங்கி கவுரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.