காலவரையற்ற வேலைநிறுத்தம்: மாவட்டம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தியேட்டர்கள் உரிமையாளர்க காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

Update: 2018-03-16 21:45 GMT
திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும், தியேட்டர்களில் டிஜிட்டல் முறையில் சினிமா படங்களை திரையிடும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இதற்கான கட்டணத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் குறைக்கப்படாததால் கடந்த 1–ந்தேதி முதல் தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிடப்படவில்லை.

இந்தநிலையில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகவும், கேளிக்கை வரியை குறைக்க கோரியும் தியேட்டர் உரிமையாளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால், படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்