போர் விமானங்களை தயாரிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்
போர் விமானங்களை தயாரிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
திருச்சி,
மத்திய அரசின் பாதுகாப்பு துறை உற்பத்தி பிரிவு சார்பில் திருச்சியில் நேற்று தமிழகத்தில் ராணுவ தளவாட பொருட்கள் தயாரிப்புக்கான தொடர் வளாகம் அமைப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். இந்திய படைக்கல தொழிற்சாலைகளின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் எஸ்.கே. சவ்ராஷ்யா வரவேற்று பேசினார்.
மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது.
நமது நாட்டின் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடங்களை நாமே வடிவமைத்து நாமே அதனை தயாரிக்கவேண்டும் என்பதில் பிரதமர் மோடி மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதன் விளைவு தான் பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் பணியில் தனியார் நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ராணுவ தளவாட பொருட்கள் தயாரிப்பதற்கான தொடர் வளாகங்கள் இந்திய அளவில் இரண்டு இடங்களில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதில் ஒரு தொடர் வளாகம் தமிழகத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஏற்கனவே சென்னை, ஓசூர், கோவை, சேலம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பெல், துப்பாக்கி தொழிற்சாலை ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் அமைந்துள்ள திருச்சியில் நடத்தப்படுகிறது.
திருச்சியில் அமைந்துள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி பாதுகாப்பு துறைக்கு தேவையான பொருட்களை தயாரித்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் நமது நாட்டின் ராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதுடன் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும்.
பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தில் ‘தேஜஸ்’ போர் விமானங்கள் முழுக்க முழுக்க நமது நாட்டின் முயற்சியிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தால் வருடத்திற்கு 6 போர் விமானங்கள் தான் தயாரிக்க முடிகிறது. ஆனால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு தேவை 123 விமானங்கள்.
எனவே தனியார் தொழில் நிறுவனங்கள் எச்.ஏ.எல். நிறுவனத்துடன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்க முன்வர வேண்டும். அதற்கு தேவையான தொழில் நுட்பங்கள், திறன் மேம்பாட்டினை நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் சம்பத் பேசும்போது, ‘ராணுவ தளவாட பொருட்கள் தொடர் வளாகம் அமைப்பதற்கு தமிழகத்தை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்பு துறை தொடர்பாக தமிழகத்தில் மத்திய அரசு தொடங்க உள்ள தொழிற் பூங்கா உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். ஸ்ரீபெரும்புதூரில் ரூ.180 கோடி திட்ட மதிப்பீட்டில் 5 லட்சம் சதுர அடியில் தொழிற்பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட உள்ளது’ என்றார்.
தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பெஞ்சமின், வளர்மதி, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஞானதேசிகன், பாதுகாப்பு துறையின் கூடுதல் செயலாளர் சுபாஷ் சந்திரா, திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் டான்சியா செயலாளர் மோகன் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் திருச்சி பகுதியை சேர்ந்த சிறு குறு தொழில்கள் சங்கம், பெல்சியா மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் கல்வியாளர்கள், துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அங்கு தயாரிக்கப்படும் நவீன ஆயுதங்களையும் அவர் பார்வையிட்டார்.