ரேரோடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 350 குடிசை வீடுகள் இடித்து அகற்றம்
ரேரோடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 350 குடிசை வீடுகளை மாநகராட்சியினர் அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர்.
மும்பை,
ரேரோடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 350 குடிசை வீடுகளை மாநகராட்சியினர் அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியில் 2 பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
குடிசை வீடுகள் இடித்து அகற்றம்
மும்பை ரேரோடு, ரத்தி பந்தர் மற்றும் லகாடா பந்தர் பகுதி கடற்கரையோரம் அமைந்துள்ளது. இங்கு பலர் சட்டவிரோதமாக கடற்கரையை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த பகுதியில் மீனவர் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மும்பை துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் மாநகராட்சியினர் உதவியுடன் ரத்தி பந்தர், லகாடா பந்தர் பகுதியில் இருந்த சுமார் 350 குடிசை வீடுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர்.
பெண்ணுக்கு நெஞ்சு வலி
போதிய கால அவகாசம் கொடுக்காமல் குடிசைகளை அகற்றியதால் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். எனினும் அதிகாரிகள் போலீசார் மூலம் பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
வீடுகள் இடித்து அகற்றப்படுவதை பார்த்து அதிர்ச்சியில் மீனவ பெண் சுனிதா(வயது35) என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. பாருபாய் (70) என்ற மூதாட்டி மயங்கி விழுந்தார். அதிகாரிகள் 2 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக மும்பை துறைமுக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், “நாங்கள் இந்த பகுதியில் 3 தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. மேலும் அதிகாரிகள் வீட்டில் இருந்த பொருட்களை காலி செய்வதற்கு கூட எங்களுக்கு கால அவகாசம் கொடுக்கவில்லை. 12 மணி நேரத்தில் வீடுகளை காலி செய்யவேண்டும் என நோட்டீஸ் கொடுத்துவிட்டு, எங்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்து வீடுகளை இடித்துவிட்டனர்.
தற்போது எங்களுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்றும் தெரியவில்லை என கண்ணீருடன்” கூறினர்.