மதுரை நகருக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
பெரியாறு அணையில் இருந்து மதுரை நகருக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கூறினர்.
மேலூர்,
பெரியாறு அணை லோயர் கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தால் பெரியாறு பாசன விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும், திட்டத்தை கைவிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மேலூரில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் முன்னாள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாண்டிகருப்பன், வக்கீல் அசோக்குமார், பாசன சங்க பொருளாளர் ஜெயபால், வெள்ளலூர் அம்பலகாரர் குறிஞ்சிகுமரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பாசன நீர் பற்றாக்குறையால் தொடர் நஷ்டங்களை சந்தித்து வரும் பெரியாறு பாசன விவசாயிகள், இத்திட்டத்தால் வரும் காலங்களில் பெரியாறு நீர் ஆதாரத்தை இழந்து விவசாயத்தை கைவிடும் அபாயம் உள்ளது. கடந்த 3 வருடங்களாக பெரியாறு நீர் வழங்கப்படாததால் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் இல்லாமல் விவசாயம் குறைந்து உள்ளது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணை லோயர் கேம்ப்பில் இருந்து மதுரை நகருக்கு குடிநீருக்கு தண்ணீர் எடுத்தால் ஒரு போக சாகுபடி பகுதியான மேலூரில் விவசாயம் அழிந்து விடும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில், ஆந்திராவில் கோதாவரி கிருஷ்ணா நதிகள் இணைக்கப்பட்டு பாசன பகுதிகள் கூடிவரும் நிலையில், இங்கு ரூ.1150 கோடியில் புதிய நீர் ஆதாரத்தை உருவாக்க முயற்சிக்காமல் பெரியாறு பாசன நீர் ஆதாரத்தை கெடுக்கும் இத்திட்டத்தை தீட்டிய அதிகாரிகளுக்கும், இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் போகும் அபாயத்தை அரசுக்கு சொல்லாத அதிகாரிகளுக்கும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை கைவிடவும், மாற்றியமைக்கவும் செய்ய வேண்டிய முயற்சிகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டத்தை கைவிடக்கோரி முதல்-அமைச்சர், அமைச்சர்களை சந்திக்கவும், பெரியாறு பாசன பகுதி எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து விவசாயிகள் முயற்சிக்கு ஆதரவு பெறவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் பிறகும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து நடத்த வேண்டிய போராட்டங்கள் பற்றி பின்னர் கூடி ஆலோசிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் பாசன சங்க செயலாளர் ரவி நன்றி கூறினார்.