சிறு பாலத்தில் சிக்கிய லாரிகள் போக்குவரத்து பாதிப்பு
கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து பெத்திக்குப்பம் ரெயில்வே மேம்பாலம் வரை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது ரூ.17 கோடியே 42 லட்சம் செலவில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது.;
கும்மிடிப்பூண்டி,
இதன் ஒரு பகுதியாக ஆங்காங்கே சாலைக்கு அடியில் செல்லும் சிறுபாலம் அமைத்திடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரையொட்டி சாலைக்கு அடியில் செல்லும் சிறுபாலம் அமைக்கப்பட்டது.
அவ்வாறு அமைக்கப்பட்ட சிறுபாலத்தில் நேற்று எதிரெதிரே வந்த 2 லாரிகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிக்கி கொண்டன. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகள் மீட்கப்பட்டன. இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.