கூடுவாஞ்சேரியில் பயணிகள் ரெயில் மறியல்
செங்கல்பட்டு- சென்னை கடற்கரை விரைவு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் தாமதமாக வருவதால் அதிருப்தி அடைந்த பயணிகள் நேற்று அந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு தினந்தோறும் ஏராளமான மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில விரைவு மின்சார ரெயில் ஆகும்.
இந்த ரெயில்களில் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள்.
அந்த வகையில், தினந்தோறும் காலை செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் விரைவு மின்சார ரெயில் காலை 8.25 மணிக்கு கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு வந்து சேரும்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை விரைவு மின்சார ரெயிலுக்காக காத்திருந்தனர்.
ஆனால் அந்த ரெயில் 15 நிமிடம் தாமதமாக 8.40 மணிக்கு கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு வந்தது. நீண்ட நேரம் காத்துக்கிடந்த பயணிகள் அடித்துப்பிடித்து ரெயிலில் ஏறினார்கள். ஆனால் ரெயில் உடனே புறப்படவில்லை. 10 நிமிடம் கழித்து ரெயில் புறப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் 200-க்கும் மேற்பட்டோர் ரெயிலில் இருந்து கீழே இறங்கி, ரெயிலின் முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ரெயிலில் செல்வதற்காக கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் கூடியது.
இதையடுத்து தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரெயிலையும் அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டம் குறித்து கூடுவாஞ்சேரி ரெயில் நிலைய மேலாளர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
அதன் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகமது அஸ்லாம், ரெயில்வே உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது “உங்கள் போராட்டத்தின் காரணமாக அனைத்து ரெயில்களும், வழியிலேயே நிற்கிறது. இதனால் வெளியூர் செல்லும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ரெயில் மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்” என போலீசார் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், “தென்னக ரெயில்வே துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் நேரில் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போது தான் போராட்டத்தை கைவிடுவோம்” என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதற்கிடையே, கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கூடிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டனர்.
ஆனாலும் மறியல் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்பதை உணர்ந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர்.
இதன் பின்னர் சுமார் 11 மணி அளவில் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களில் இருந்து 10 பேரை மட்டும் அழைத்து கூடுவாஞ்சேரி ரெயில் நிலைய மேலாளர் அலுவலகத்தில் ரெயில்வே உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தரப்பில் பேசியவர்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது.
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை விரைவு மின்சார ரெயில்களும், செங்கல்பட்டு-தாம்பரம் மின்சார ரெயில்களும், கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் காலதாமதமாக வருகிறது. இது காலை நேரங்களில் பணிகளுக்கு செல்பவர்களுக்கும், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை அளிக்கிறது.
இது குறித்து ரெயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே செங்கல்பட்டு-தாம்பரம் மின்சார ரெயில்கள் மற்றும் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை விரைவு ரெயில்கள் ஆகியவை கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்துக்கு சரியான நேரத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதுமட்டும் இன்றி, கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். திருமால்பூரில் இருந்து வரும் விரைவு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை காலை, மாலை நேரங்களில் சிறப்பு மின்சார ரெயில்களை இயக்க வேண்டும்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து, உங்கள் கோரிக்கைகள் பற்றி தென்னக ரெயில்வேயின் உயர்மட்ட அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் 11.35 மணியளவில் ரெயில் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தின் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் குருவாயூர், சோழன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும், அதே போல் தென் மாவட் டங்களில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும், புறநகர் மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.