தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை போலீசார் விசாரணை
ஒகேனக்கல் அருகே, தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள முசல்மடுவு பகுதியில் சாலையோரத்தில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
அவரது முகம் கல்லால் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
யார் அவர்?
பிணமாக கிடந்தவர் கோடுபோட்ட சட்டையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தார். யார் அவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் அந்த வழியாக மொபட்டில் வந்ததும், அப்போது அவ்வழியாக காரில் வந்தவர்கள் அவர் மீது மோதியதும், நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை காரில் வந்த கும்பல் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் அஞ்செட்டி சோதனை சாவடியிலும் சந்தேகத்திற்கு இடமாக யாராவது அப்பகுதியில் நடமாடுகிறார்களா என்றும் போலீசார் கண்காணித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.