திருமருகல் பகுதியில் உளுந்து, பயறு மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை
திருமருகல் பகுதியில் உளுந்து, பயறு மகசூல் குறைவாக கிடைத்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருமருகல்,
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றியத்தில் ஆண்டு தோறும் 12 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சரிவர தண்ணீர் திறந்த விடாததாலும், பருவமழையும் சரிவர பெய்யாததாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது.
அதேபோல் நடப்பு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், பருவ மழை பொய்த்து போனதாலும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் வாங்கி சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். நெற்பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் கன மழையினால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. மீண்டும் அவர்கள் சாகுபடி பணியை மேற்கொண்டனர். இந்த பயிருக்கும் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி போனது.
உளுந்து, பயறு சாகுபடி
விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் உளுந்து, பயறு சாகுபடி செய்வது வழக்கம். இதேபோல் இந்தாண்டும் விவசாயிகள் வேளாண்மை துறை ஆலோசனைப்படி திருமருகல் ஒன்றியப் பகுதியில் உளுந்து, பயறு மற்றும் எள் ஆகியவற்றை சாகுபடி செய்தனர். உளுந்து, பயறு செடிகள் பூப்பூத்து காய்கள் பிடிக்கும் தருணத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் பல இடங்களில் செடிகள் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வளர்ந்த செடிகளை பூச்சிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் மருந்து தெளித்து செடிகளை காப்பாற்றி வந்தனர்.
தற்போது திருமருகல் ஒன்றிய பகுதியில் திருமருகல், கரையிருப்பு, வள்ளுவன்தோப்பு, குருவாடி, பண்டாரவாடை, ஆதினக்குடி, மருங்கூர், கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், புளியக்குடி, திருப்புகலூர், தெற்குலேரி, நெய்க்குண்ணம், கிடாமங்கலம், போலகம், அண்ணா மண்டபம், சீயாத்தமங்கை, தென்பிடாகை,சேஷமூலை, மேலப்பூதனூர், பெரு நாட்டான்தோப்பு, வவ்வாலடி, ஏனங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உளுந்து, பயறு செடிகள் எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் கவலை
உளுந்து, பயறு செடிகளில் குறைவான காய்பிடிப்பு இருப்பதால் மகசூல் குறைவாகவே உள்ளது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடன் பெற்று நெல் சாகுபடி செய்ததில் பாதிக்கப்பட்ட நிலையில் உளுந்து, பயறு மகசூலும் குறைவாக உள்ளதால் மிகவும் வேதனையாக உள்ளது என்றும், கடன் வாங்கி செலவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை என்றும் மனவேதனையுடன் விவசாயிகள் கூறினர்.