நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் சென்னை ரேஸ் பயிற்சி நிறுவனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில், சென்னை ரேஸ் பயிற்சி நிறுவனத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று திறந்து வைத்தார்.
நெல்லை,

திறப்பு விழா
அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ‘‘சென்னை ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் பிரைவேட் லிமிடெட்’’ என்ற பயிற்சி நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிறுவனத்தின் 14–வது கிளை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில், பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சி நிறுவன திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நிர்வாக இயக்குனர் பரத் சீமான் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்தார். நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்–ஒழுங்கு) சுகுணா சிங், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, வாழ்த்தி பேசினர். விழாவில் அகாடமி–டெக்னாலஜி இயக்குனர் மகாராஜன் முருகன், பங்குதாரர் மணிசங்கர், தொழில் அதிபர்கள், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த பயிற்சி
இதுகுறித்து நிர்வாக இயக்குனர் பரத் சீமான் கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசு பணிகளுக்குகான போட்டித்தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தென் மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே நெல்லையை மையமாக கொண்டு எங்களது 14–வது கிளை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு மாணவ– மாணவிகளுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறந்த பயிற்சி அளிக்கப்படும். ஒரே நேரத்தில் 200 பேர் அமர்ந்து படிக்கவும், ‘ஆன்லைன்’ தேர்வுகள் எழுதும் வகையிலும் கணினி அறை உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. தனித்தனி வகுப்பறைகள், அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நெல்லையில் பயிற்சி நிறுவனம் திறக்கப்பட்டு உள்ளது. எங்களது பயிற்சி நிறுவனத்தில் தற்போது மாணவ–மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது’’ என்றார்.