தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-03-15 22:45 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் அண்ணா சிலை அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, தொ.மு.ச. பேரவை செயலாளர் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தமிழ்மணி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதலை அதிகப்படுத்தி வருவதை கண்டித்தும், மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்தும், சேம நலநிதிக்கு வட்டி குறைப்பதை கைவிட வேண்டும், நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும், வங்கிகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும், மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிற்றம்பலம் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்