கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்
நாகர்கோவிலில் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அவற்றில் முதல் நிலையில் தேர்தல் நடைபெற உள்ள 41 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் அதிகாரிகளான கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள், துறை அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நாகர்கோவிலில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. பயிற்சி முகாமை கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில் உள்ள 181 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 நிலைகளில் நடைபெற உள்ளது. முதல்நிலையில் 41 கூட்டுறவு சங்கங்களுக்கும், 2–வது நிலையில் 44 கூட்டுறவு சங்கங்களுக்கும், மூன்றாம் நிலையில் 48 கூட்டுறவு சங்கங்களுக்கும், நான்காம் நிலையில் 48 கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் நிலையில் தேர்தல் நடைபெற உள்ள 41 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 12–ந் தேதி வெளியிடப்பட்டது. இரண்டாம் நிலையில் தேர்தல் நடைபெற உள்ள 44 சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வருகிற 19–ந் தேதியும், மூன்றாம் நிலையில் உள்ள 48 கூட்டுறவு சங்கங்களுக்கு வருகிற 26–ந் தேதியும், நான்காம் நிலையில் உள்ள 48 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரல் மாதம் 2–ந் தேதியும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதேபோல் முதல் நிலை சங்கங்களுக்கு அடுத்த மாதம் 2–ந் தேதியும், இரண்டாம் நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 7–ந் தேதியும், மூன்றாம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு 16–ந் தேதியும், நான்காம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு அடுத்த மாதம் 23–ந் தேதியும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
எனவே இந்த தேர்தலை எவ்வித முறைகேடுகளோ, குற்றச்சாட்டுகளோ இன்றி சிறப்பான முறையில் நடத்த வேண்டும். அதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சங்கங்களுக்கும் உரிய வாக்காளர் பட்டியலை வழிகாட்டுதல் நெறிகளின்படி தயாரிக்க வேண்டும். அதில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் இடம் அளிக்கக்கூடாது. மேலும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வெளியிடுதல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது, வேட்பு மனுக்கள் பெறும் நாளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வேட்பு மனு பரிசீலனை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடுவது, வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், விதிமுறைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா பேசினார்.
கூட்டத்தில் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர்கள் பிரியதர்ஷினி, ராஜேந்திரன், குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன், பொது மேலாளர் கனகராஜ், தேர்தல் அலுவலர்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கான கையேடு வழங்கப்பட்டது.