புனேயில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் 2 பேர் கைது
புனேயில் ரூ.82 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புனே,

ரகசிய தகவல்
மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியை சேர்ந்த தாலிம் மியா என்பவர் புனேயில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட வருவதாக தேசிய புலனாய்வு முகமையின் மும்பை கிளைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் புனே போலீசார் உதவியுடன் நேற்றுமுன்தினம் இரவு புனேயில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்கு வந்த தாலிம் மியாவை அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவர் புனேயில் இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட வந்ததை ஒப்புக் கொண்டார்.
கள்ளநோட்டுகள் பறிமுதல்
அவர் கொடுத்த தகவலின் பேரில், இதில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் சிக்கோடியை சேர்ந்த அசோக் குமார் என்பவரையும் போலீசார் புனேயில் வைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.82 ஆயிரம் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, மராட்டியம், கர்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது.
கைதான இவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.