வரி பாக்கி வைத்துள்ள மேலும் 10 நிறுவனங்களின் சொத்துகளுக்கு ‘சீல்’ வைப்பு மும்பை மாநகராட்சி நடவடிக்கை

வரி பாக்கி வைத்துள்ள மேலும் 10 நிறுவனங்களின் சொத்துகளுக்கு மும்பை மாநகராட்சி ‘சீல்’ வைத்துள்ளது.

Update: 2018-03-14 22:41 GMT
மும்பை,

வரி பாக்கி வைத்துள்ள மேலும் 10 நிறுவனங்களின் சொத்துகளுக்கு மும்பை மாநகராட்சி ‘சீல்’ வைத்துள்ளது.

சொத்துவரி பாக்கி

மும்பை மாநகராட்சிக்கு ஆக்ட்ராய் வரி மூலம் அதிக வருவாய் கிடைத்து வந்தது. தற்போது ஜி.எஸ்.டி (சரக்கு வரிசேவை) அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஆக்ட்ராய் வரி ஒழிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு வருமானம் குறைந்தது. இதையடுத்து வருமானத்தை பெருக்க மாநகராட்சி சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

இதனால் மும்பை முழுவதும் சொத்து வரி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

‘சீல்’ வைப்பு

இதன்படி சொத்துகளுக்கு சீல் வைக்கப்பட்டும் வருகிறது. ரூ.17 கோடியே 61 லட்சம் அளவிற்கு சொத்து வரி பாக்கி வைத்திருந்த பாந்திரா, அந்தேரி உள்ளிட்ட இடங்களில் தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கு மாநகராட்சியினர் சீல் வைத்தனர்.

இந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சொத்து வரி பாக்கி வைத்திருந்த மேலும் 10 நிறுவனங்களின் சொத்துகளுக்கு ‘சீல்’ வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதில் பாம்பே டையிங் நிறுவனத்திற்கு சொந்தமான 2 சொத்துகள்(ரூ.1.40 கோடி), போரிவிலியில் உள்ள கோகுல் ஷாப்பிங் சென்டர்(ரூ.90 லட்சம்), அரிஸ்டோ டெவலப்ர்ஸ்(ரூ.2.24 கோடி), மயூர் பில்டர்ஸ் (6.35 லட்சம்) உள்ளிட்ட 10 நிறுவனங்களின் சொத்துகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்