பள்ளி மாணவனை மிரட்டி தகாத உறவு கொண்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி மாணவனை மிரட்டி தகாத உறவு கொண்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;

Update: 2018-03-14 22:15 GMT
மும்பை,

பள்ளி மாணவனை மிரட்டி தகாத உறவு கொண்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பள்ளி மாணவன்

மும்பையை சேர்ந்த 15 வயது சிறுவன் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தினமும் பள்ளி முடிந்து கார் கழுவும் வேலை பார்த்து வந்தான். கடந்த 2012-ம் ஆண்டு சிறுவன் காரை கழுவி கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த முகமது சேக் (வயது25) என்ற வாலிபர் தனது காரை கழுவும் படி சிறுவனிடம் தெரிவித்தார்.

அதன்படி சிறுவன் அவரது காரை கழுவ சென்றான். அப்போது, சிறுவனை காருக்குள் வைத்து முகமது சேக் மிரட்டி தகாத உறவு கொண்டார்.

10 ஆண்டு சிறை

இதனால் சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி அவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது சேக்கை கைது செய்தனர்.பின்னர் அவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது முகமது சேக் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, முகமது சேக்கிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்