புதுப்பெண்ணின் கழுத்தை அறுத்த கணவர் கைது அடகு வைத்த நகையை திருப்பி கேட்டதால் வெறிச்செயல்
அடகு வைத்த நகையை திருப்பி கேட்டதால் புதுப்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்
விக்கிரமசிங்கபுரம்,
அடகு வைத்த நகையை திருப்பி கேட்டதால் புதுப்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
தகராறு
நெல்லை பாளையங்கோட்டை திருஞானசம்பந்தர் நாயனார் தெருவை சேர்ந்தவர் காந்தி மகன் பாக்கியராஜ் (வயது 31), தச்சு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகள் ராஜேசுவரிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் பாக்கியராஜ் தனது மனைவி அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை வாங்கி அடகு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், ராஜேசுவரி தனது கணவரிடம் நகையை எங்கு அடகு வைத்து உள்ளர்கள், அதை திருப்பி தாருங்கள் என்று கேட்டார். அதற்கு அவர், விக்கிரமசிங்கபுரத்தில் அடகு வைத்து இருப்பதாக கூறி உள்ளார்.
அரிவாள்மனையால்...
இதையடுத்து பாக்கியராஜ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு நேற்று விக்கிரமசிங்கபுரத்துக்கு புறப்பட்டார். அப்போது அவர் தனது மனைவியை விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் உள்ள தனது அண்ணன் சங்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்தும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியராஜ் அங்கிருந்த அரிவாள்மனையை எடுத்து தனது மனைவி ராஜேசுவரியின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜேசுவரி அலறி துடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் பாக்கியராஜ் அங்கிருந்து ஓடி விட்டார்.
கைது
பின்னர் ராஜேசுவரியை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பாக்கியராஜை கைது செய்தனர்.
அடகு வைத்த நகையை திருப்பி கேட்ட புதுப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.