விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தீர்மானம்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தீர்மானம் செய்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாதாந்திரகூட்டம் தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜெயராஜ், துணை தலைவர் சண்முகம், மாநில பேரவை உறுப்பினர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் கருதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும் என்ற தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இணை செயலாளர் குருசாமி நன்றி கூறினார்.