இன்சூரன்சு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை, அதிகாரிகள் ஆலோசனை
இன்சூரன்சு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
புதுச்சேரி,
புதுவை அரசு ஊழியர்களுக்கு இன்சூரன்சு வசதியுடன் சிகிச்சை அளிப்பது, ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் காபினெட் அறையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் பொது மேலாளர் கிங்ஸ்லி, துணைத்தலைவர் சுதர்சன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்கள் இன்சூரன்சு திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கங்களை அளித்தனர்.
இன்சூரன்சு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.