காவேரிப்பட்டணம் அருகே மாணவி தற்கொலை: பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது
காவேரிப்பட்டணம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவீரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் தமிழரசி (வயது 17). இவர் அகரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் தமிழரசி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவி தமிழரசியை அதே பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்தார். ஆனால் இந்த காதலை தமிழரசி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர், பிளஸ்-2 படிக்கும் நண்பருமான மற்றொருவரை அழைத்துக்கொண்டு 12-ந்தேதி தமிழரசி வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார். அப்போது தேர்வு எழுதி விட்டு வந்த தமிழரசியை வழிமறித்து அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தமிழரசியிடம் இருந்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டை (ஹால் டிக்கெட்டை) பிடுங்கி அதை கிழித்து எறிந்தார். இதனால் மனமுடைந்த தமிழரசி தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதில் தொடர்பு உடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசியின் தந்தை சங்கர் பாரூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்தது. ஆனால் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
மாணவி தற்கொலைக்கு காரணமான மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்களும், பொதுமக்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் அங்கு வந்தார். தமிழரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தமிழரசியை தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் மாணவி தமிழரசி உடலை உறவினர்கள் பெற்றுச்சென்றனர். பின்னர் நேற்று சொந்த ஊரில் உடலை அடக்கம் செய்தனர்.
ஒரு தலைக்காதலில் தகராறு ஏற்பட்டதால் பள்ளி மாணவி தற்கொலை மற்றும் மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.