கிருஷ்ணகிரியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-03-14 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர் மின் கோபுரங்கள் மற்றும் மின் பாதைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சட்டபூர்வ இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சக்தி, குணசேகரன், சின்னராஜி, மாதலிங்கம், மணி, முத்து, திருநாவுக்கரசு, அன்பழகன், நடராஜ், விவேகானந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டெல்லிபாபு பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு நிறுவனம் தற்போது நமது மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள் வழியாக 10-க்கும் மேற்பட்ட டவர்லைன் திட்டங்களை விவசாய நிலங்கள் வழியாக, விவசாயிகள் அனுமதியின்றி, அத்துமீறி, மிரட்டி அமைத்து வருகிறது. இதுகுறித்து எவ்வித சட்டபூர்வ இழப்பீட்டையும் வழங்காமல் பல்வேறு பொய் வாக்குறுதிகளை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. எனவே, இத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சட்டபூர்வ இழப்பீடு வழங்கிட வேண்டும். மாற்றுவழியில் சாலை ஓரமாக கேபிள் வழியாக திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி, விவசாய சங்க மாவட்ட குழு வஜ்ஜிரவேல் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில், மாவட்ட குழு கந்தன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்