எஸ்.பி.பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; கொத்தனார் பலி
எஸ்.பி.பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கொத்தனார் பலியானார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா சின்னத்தொண்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 38). கொத்தனார். இவர் தற்போது வட்டாணம் கிராமத்தில் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் எஸ்.பி.பட்டினம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட முனியசாமி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பெருமாளேந்தல் விஜய்(23), கொடிப்பங்கு ஜெயக்குமார்(43) ஆகியோர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அப்போது வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் சேது பாவாசத்திரம் ராஜா என்பவர் இவர்கள் மீது மோதியதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காயம்பட்டவர்களை திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த முனியசாமி மனைவி சரண்யா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு சங்கவி(4) என்ற பெண் குழந்தை உள்ளது.