ராமநாதபுரம் அருகே ஊருணியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
ராமநாதபுரம் அருகே இடையர்வலசை ஊருணியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்துபோனார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்களூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகைராஜ். இவருடைய மனைவி சரவணாதேவி. இவர்களுக்கு பாலாஜி(வயது 15), ரிஷிகேசவன்(12) ஆகிய 2 மகன்கள் உண்டு. கார்த்திகைராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சரவணாதேவி தற்போது ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் தனது மகன்களுடன் வசித்து வருகின்றார். பாலாஜி, ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதற்காக படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சரவணாதேவியின் தம்பி மங்களேசுவரன் இடையர்வலசை ஊருணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலாஜியும், ரிஷிகேசும் மங்களேசுவரனுடன் குளிக்க சென்றுள்ளனர்.
ஊருணி கரையில் மங்களேசுவரன் துணிகளை துவைத்துகொண்டிருந்தாராம். அப்போது ஊருணியில் இறங்கி குளித்து கொண்டிருந்த பாலாஜி எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் பாலாஜி தத்தளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீருக்குள் மூழ்கிய பாலாஜியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பாலாஜி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவணாதேவி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.