ஊட்டி-சென்னை இடையே இயக்கப்படும்: நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று 90 வயது
கோவை மக்கள் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வது என்றால் பெருமைக்குரிய விஷயமாக கருதுவார்கள். இதற்கு காரணம் அந்த ரெயிலின் பழமை மாறாத பல்வேறு பெருமைக்குரிய விஷயங்கள் தான்.மதிப்புமிக்க நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 89 வயது நிறைவடைந்து இன்று(வியாழக்கிழமை) 90-வது வயது பிறக்கிறது.
ஆங்கிலேயர்கள் வசதிக்கான ரெயில் கடந்த 1908-ம் ஆண்டு முதல் 1929-ம் ஆண்டு வரை சென்னை சென்டிரல்-மேட்டுப்பாளையம் இடையே மேட்டுப்பாளையம் மெயில் என்ற பெயரில் இயக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த ரெயில் 1929-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி புளு மவுண்டன் என்று நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னை சென்டிரல் முதல் ஊட்டி வரை தென்னக ரெயில்வே இதுநாள் வரை இயக்கி வருகிறது.
அந்த ரெயில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆங்கிலேயர்கள் சென்னையிலிருந்து கோடை விடுமுறையை கழிப்பதற்காகவும், வார விடுமுறை நாட்களை கழிப்பதற்காகவும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை அதிகம் பயன்படுத்தி வந்தனர். இதற்காக அந்த ரெயிலில் முதல் மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் சென்னையிலிருந்து ஊட்டிக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும், வழியில் உள்ள எந்த ஊருக்கும் முன்பதிவு செய்ய முடியாது. 3-ம் வகுப்பு ரெயில் பெட்டியில் தான் வழியில் உள்ள நகரங்களுக்கு முன்பதிவு செய்ய முடியும்.
மேலும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் மற்றும் 2-ம் வகுப்பில் வரும் ஆங்கிலேயர்கள் மற்றும் வசதியானவர்களின் வேலையாட்கள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வார்கள். நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மேலும் பல்வேறு பெருமைகள் உள்ளன. தென்னக ரெயில்வேயில் இயக்கப்படும் எந்த ரெயிலிலும் இணைக்கப்படாத அளவுக்கு குளு குளு வசதி பெட்டிகள் இதில் இணைக்கப்படுகிறது.
நீலகிரி எக்ஸ்பிரசில் இணைக்கப்படும் மொத்தம் உள்ள 24 பெட்டிகளில் குளு குளு வசதி பெட்டிகள் அதிகபட்சமாக 9 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. பெருமைமிக்க இந்த ரெயில் பெட்டிகள் சென்னை பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த ரெயிலுக்கான என்ஜின் ஈரோடு மற்றும் சென்னை ராயபுரம் ரெயில் என்ஜின் ஒர்க்ஷாப்பிலிருந்து கொண்டு வரப்பட்டு இயக்கப்படுகின்றன.
மேலும் தென்னக ரெயில்வேயில் நிலக்கரி என்ஜின் முதல் தற்போது உள்ள நவீன மின்சார ரெயில் என்ஜின் வரை இயக்கப்பட்டு வரும் ஒரே ரெயில் நீலகிரி எக்ஸ்பிரஸ் தான். தென்னக ரெயில்வேயில் முதன்முதலாக முதல் வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்த ரெயிலில் தான்.
சென்னையிலிருந்து அகல ரெயில் பாதையில் மேட்டுப்பாளையம் வரை இயக்கப் படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் அதே பெயரிலேயே குறுகிய ரெயில் பாதையில் (நேரோ கேஜ்) மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் கோவைக்கு காலை 5 மணிக்கும், மேட்டுப்பாளையத்துக்கு 6.15 மணிக்கும், ஊட்டிக்கு மதியம் 12.36 மணிக்கும் சென்றடையும்.
இதே போல மறுமுனையில் ஊட்டியிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையத்துக்கு இரவு 7.45 மணிக்கும், கோவைக்கு 8.50 மணிக்கும் வந்து மறுநாள் காலை 5.05 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.