கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது

கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2018-03-14 22:15 GMT
கோத்தகிரி,

கோத்தகிரியில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் பாவா சிக்கந்தர் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க துணை தலைவர் முகமது ஜாபர், நீலகிரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆதி கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

மேலும், வியாபாரிகள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், உரிமம் பெறாத கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கூட்டத்தில், உணவு பாதுகாப்பு உரிமம் கோரிய 52 கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிமம் உடனடியாக வழங்கப்பட்டது. இதில், மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் 51 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், பேப்பர் தட்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது எனவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக குரங்காணி தீ விபத்தில் சிக்கி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்