அனுமதி பெறாமல் கச்சா எண்ணெய் கிணறுகளை அமைத்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் கச்சா எண்ணெய் கிணறுகளை அமைத்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என கதிராமங்கலத்தில் பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கிராமத்தில் நில வளமும், நீர்வளமும் பாதிக்கப்படுவதால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 300–வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
கதிராமங்கலத்தில் மண்ணையும் நிலத்தடி நீரையும் காக்க போராட்டம் நடக்கிறது. எந்த தொழிற்சாலையும் இல்லாத இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கதிராமங்கலத்தில் 24 பேருக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மட்டும் 224 பேர் மூளை வளர்ச்சி குறைந்தவர்களாக பிறந்துள்ளனர். இந்த நிலையிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அடுக்கடுக்காக அழிவு திட்டங்களை செயல்படுத்த துடிக்கிறது.
தமிழகத்தின் தென்பகுதியில் மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எண்ணெய் கிணறுகள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட உள்ள 55 எண்ணெய் கிணறுகளில் 24 கிணறுகள் காவிரி படுகையில் அமைக்கப்பட உள்ளன. காவிரி படுகை மற்றும் தமிழகம் அழிந்தால் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. மேலும் இங்கு அபாயகரமான ரசாயனத்தை உள்ளே செலுத்தும் 35 கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. முடிவு செய்துள்ளது. ஷேல் கியாஸ் திட்டமும் கைவிடப்படவில்லை. தமிழக அரசு காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழகத்தில் அமைத்த 700 எண்ணெய் கிணறுகளில், 183 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளது என்கிறது. ஆனால் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் 219 கிணறுகளுக்கு மட்டுமே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கோரியதாக கூறுகிறது. அனுமதி இல்லாமல் கச்சா எண்ணெய் கிணறுகளை அமைத்து உள்ளனர். சாதாரண குடிநீர் குழாய் அமைக்கவே பல இடங்களில் அனுமதி பெற வேண்டி உள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் கிணறுகளை அனுமதி இல்லாமல் எப்படி அமைத்தார்கள்? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் கச்சா எண்ணெய் கிணறுகளை அமைத்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் இயக்குனர் கவுதமன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன்காந்தி, தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யநாதன், மக்கள் பாதை மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.