3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
கன்னியாகுமரி அருகே மையம் கொண்டு உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
தூத்துக்குடியை அடுத்துள்ள கூட்டாம்புளி பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால அந்த பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நேற்றும் கடலுக்கும் செல்லவில்லை.
இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதே போன்று கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில் வருமாறு):-
கோவில்பட்டி - 9
ஓட்டப்பிடாரம் - 2
சாத்தான்குளம் - 2.60
தூத்துக்குடி - 8.60
விளாத்திகுளம் - 6
குலசேகரன்பட்டினம் - 7
எட்டயபுரம் - 4
சூரங்குடி - 5
வைப்பாறு - 2