நடிகர்கள் ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர் மனு தள்ளுபடி

நகைச்சுவை நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசிய வழக்கில் இடைக்கால நிவாரணம் கேட்ட நடிகர்கள் ரன்வீர் சிங், அர்ஜூன் கபூரின் மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2018-03-13 22:00 GMT
மும்பை,

மும்பை ஒர்லியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தி திரையுலகினர் கலந்துகொண்ட நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது இந்தி நடிகர்கள் ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர் ஆகியோர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் 2015-ம் ஆண்டு மும்பை போலீசார்் நடிகர்கள் ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் என திரையுலகினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புனே போலீசிலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் தங்கள் மீது தீய நோக்குடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.) ரத்து செய்ய வேண்டும் என நடிகர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு, நடிகர்கள் ரன்வீர்சிங், அர்ஜூன் ஆகியோருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என கூறி, அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதே வழக்கு தொடர்பாக மும்பை ஐகோர்ட்டின் மற்றொரு அமர்வு நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் மீது அடுத்த உத்தரவு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்