புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் வளர்ப்பு கூண்டு அறிமுகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் வளர்ப்பு கூண்டு அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2018-03-13 22:30 GMT
மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன் வளத்தினை ஆதாரமாக கொண்டு 180 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு 2000 விசைப்படகுகளும், 3 ஆயிரம் நாட்டுப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த நிலையில் கடலில் தடை செய்யப்பட்ட மீன் வலைகளை பயன்படுத்துவதால், நாளுக்கு நாள் கடலில் மீன் வளம் குறைந்து வருகிறது. இதையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கூண்டுகளில் மீன் வளர்க்கும் முறையை மீன்வளத்துறை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக வடக்கு அம்மாபட்டினம், கட்டு மாவடி, புதூர், அரசனரிபட்டினம், புதுக்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 9 மீன் வளர்ப்பு கூண்டுகள் வழங்கப் பட்டுள்ளது.

கடல் பகுதியில் மீன் வளர்ப்பு கூண்டுகள் வைக்கப்பட்டு அதில் கொடுவா மீன், பாறை மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டுள்ளது. இதற்கு உணவாக சிறு மீன்கள், மீன் துண்டுகள் வழங்கப்படுகின்றன. இதன் செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது. முதல் கூண்டில் பிடிக்கப்படும் மீன்களின் வருமானத்தை வைத்து அதிகமான கூண்டுகளை மீனவர்கள் கடலில் வைத்துக்கொள்ளலாம். கடலில் மீன் வளம் இல்லாத நிலையில் இது போன்று கூண்டு மீன் வளர்ப்பு முறையினை மீனவர்கள் பின்பற்றினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பதிப்படையாது. இதனால் இந்த கூண்டு மீன்வளர்ப்பு முறையை மீன் வளத்துறையினர் ஊக்குவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்