வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு
திருச்சி அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமம், தெற்கு கள்ளர்தெருவை சேர்ந்தவர் மருதப்பா. இவருடைய மனைவி பிரேமாவதி(வயது 50). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு முன் அறையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் பிரேமாவதி சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தார். பின்னர் மீண்டும் வீட்டிற்குள் சென்ற அவர் கதவை தாழ்ப்பாள் போடாமல் சென்று தூங்கினார்.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் பிரேமாவதியின் முகத்தில் டார்ச் லைட்டை அடித்தார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர், அதிக ஒளி கண்ணில் பாய்ந்ததால் சுதாரிப்பதற்குள், அந்த மர்ம நபர் பிரேமாவதியின் வாயில் கையை வைத்து பொத்தி கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். பிரேமாவதி திருடன், திருடன் என்று சத்தம் போட்டதால், எழுந்த மருதப்பா நடந்த சம்பவத்தை அறிந்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிரேமாவதி வெளியில் வந்து விட்டு, வீட்டிற்குள் சென்றபோது கதவை தாழ்ப்பாள் போடாததை கண்ட மர்ம நபர், அதனை பயன்படுத்தி வீடு புகுந்து சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் வேறு வீட்டில் திருடும் நோக்கத்தோடு வந்து, பின்னர் பிரேமாவதியிடம் சங்கிலியை பறித்திருக்கலாம் எனவும், போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் பூட்டி கிடக்கும் வீடுகளின் பட்டியலை எடுத்து சென்றனர். இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து பிரேமாவதியின் கணவர் மருதப்பா கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.