கர்ப்பிணி இல்லை என்று புதிய சர்ச்சை: உஷாவின் பிரேத பரிசோதனை இறுதி அறிக்கைக்காக காத்திருக்கிறோம்
கர்ப்பிணி இல்லை என்ற புதிய சர்ச்சையில், உஷாவின் பிரேத பரிசோதனை குறித்த இறுதி அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.
திருச்சி,
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி உஷா. இந்த தம்பதி கடந்த 7-ந் தேதி தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்றனர். அப்போது துவாக்குடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜுக்கும், ராஜாவுக்கும் இடையே மோட்டார் சைக்கிளை நிறுத்த கூறியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜாவை இன்ஸ்பெக்டர் காமராஜ் ஸ்கூட்டரில் விரட்டிச் சென்று, மோட்டார் சைக்கிளில் எட்டி உதைத்ததில் உஷா கீழே விழுந்து பலியானார்.
அப்போது உஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய தடியடியில் பலர் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கலவரத்தில் ஈடு பட்டதாக 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் உஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் உஷா கர்ப்பிணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு உஷாவின் கணவர் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே உஷா, தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இருந்தார் என்றும் ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தியிடம் கேட்டபோது, “முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தான் தற்போது வந்துள்ளது. இறுதி அறிக்கை விரைவில் வரும். அதற்காக காத்திருக்கிறோம். இறுதி அறிக்கை வந்தபிறகு தான் முழு விவரம் தெரியவரும். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கிறது. சம்பவம் நடைபெற்றபோது, அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம்“ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜின் தலையில் காயம் இருந்ததால் அவர் சிகிச்சைக்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவருடைய காயத்துக்கு உரிய சிகிச்சை அளித்தபிறகும்கூட பாதுகாப்பு கருதி அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே வைக்கப் பட்டுள்ளதாகவும், அவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் காமராஜை சிறை மருத்துவமனையில் இருந்து உயர் பாதுகாப்பு தொகுதிக்கு மாற்றி உள்ளனர்.
பொதுவாக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் வழக்குகளில் சிக்கி போலீஸ் அதிகாரிகளோ, உயர் பதவிகளில் இருப்பவர்களோ சிறைக்கு வந்தால், சிறையில் கைதிகள் அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தக்கூடும். அதனால் அதுபோன்ற வழக்குகளில் வருபவர்களை பாதுகாப்பு கருதி உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைத்து வைப்பார்கள். அங்கு மற்ற கைதிகள் செல்ல முடியாது. இன்ஸ்பெக்டர் காமராஜுக்கும் அதேபோல் தான் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.