குரங்கணி மலைப்பகுதியில் மத்திய முதன்மை வன பாதுகாவலர் நேரில் ஆய்வு
காட்டுத்தீ ஏற்பட்ட குரங்கணி மலைப்பகுதியில் மத்திய முதன்மை வன பாதுகாவலர் முருகானந்தம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வருகிற மே மாதம் வரை மலையேற்ற பயிற்சிக்கும், சினிமா படப்பிடிப்புக்கும் தடை விதித்து அவர் உத்தரவிட்டார்.
தேனி,
தேனி மாவட்டம், போடி குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து மத்திய முதன்மை வன பாதுகாவலர் முருகானந்தம் நேற்று போடிக்கு வந்தார். அங்கிருந்து குரங்கணிக்கு சென்ற அவர், குரங்கணியில் காரை நிறுத்தி விட்டு வனத்துறை அதிகாரிகளுடன் தீ விபத்து ஏற்பட்ட இடத்திக்கு நடந்து சென்றார். காட்டுத்தீயில் கருகிக் கிடந்த மலைப் பகுதியை பார்வையிட்டார். தீ விபத்து எப்படி? ஏற்பட்டது என்று அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது அதிகாரிகள் அதற்கான விசாரணை நடத்து கொண்டு இருப்பதாக தெரிவித்தனர்.
மீட்பு பணிகள், தீயை அணைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது குரங்கணி மலைப்பகுதியில் வருகிற மே மாதம் வரை சினிமா படப்பிடிப்புக்கும், மலையேற்ற பயிற்சிக்கும் தடை விதித்து அவர் உத்தரவிட்டார். பின்னர் ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காட்டுத்தீ விபத்து குறித்து முழுமையான அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்வதற்காக அவர் இந்த ஆய்வு மேற்கொண்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.