திருச்சி ‘பெல்’ நிறுவனத்தில் 918 பயிற்சிப் பணியிடங்கள்

திருச்சி ‘பெல்’ நிறுவனத்தில் 918 பேர் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

Update: 2018-03-13 06:16 GMT
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது. தற்போது திருச்சி பெல் நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் 2018 பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பிரிவு வாரியாக பிட்டர் - 330, வெல்டர் - 240, டர்னர் - 25, மெஷினிஸ்ட் - 35, எலக்ட்ரிசியன் - 75, வயர்மேன் - 20, எலக்ட்ரானிக் மெக்கானிக் - 15 இடங்கள் உள்ளன. இவை தவிர இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி. பிரிஜ், டீசல் மெக்கானிக், டிராட்ஸ்மேன், சீட் மெட்டல் ஒர்க்கர், சிஸ்டம் அட்மின் அசிஸ்டன்ட், ஹீட் டிரீட்டர், கார்பெண்டர், பிளம்பர், எம்.எல்.டி. பேதாலஜி போன்ற பிரிவிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 1-4-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது.

8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், 10,12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.டி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-3-2018-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bheltry.co.in  என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்