வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங் களில் ஒன்று ‘ஏர்லைன் அல்லைடு சர்வீசஸ்’.

Update: 2018-03-13 05:35 GMT
விமான நிறுவனம்

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங் களில் ஒன்று ‘ஏர்லைன் அல்லைடு சர்வீசஸ்’. தற்போது இந்த நிறுவனத்தில் கேபின் குரூவ், ஸ்டேசன் மேனேஜர், டெபுடி சீப் பினான்சியல் ஆபீசர், தகவல் தொழில்நுட்ப அதிகாரி, இன்ஸ்ட்ரக்டர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ‘கேபின் குரூவ்’ பணிக்கு 16 இடங்களும், ஸ்டேசன் மேனேஜர் பணிக்கு 14 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் பணிகள் உள்ளன. 1-3-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படும்.

சி.ஏ., கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் , ஐ.டி. போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர அறிவியல், கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் சில பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, கட்டணம் மற்றும் தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் 23-3-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை
www.airindia.gov.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தேசிய கிராமப்புற வளர்ச்சி மையம்

மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது தேசிய கிராமப்புற மற்றும் பஞ்சாயத்து ராஜ் மையம். ஹைதராபாத்தில் செயல்படும் இந்த மையத்தில் தற்போது பல்வேறு அதிகாரி பணிகளுக்கு 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சீனியர் ரிசர்ச் பெல்லோ, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, ஜூனியர் புராஜெக்ட் சயின்டிஸ்ட், புராஜெக்ட் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், புராஜெக்ட் ஸ்கேனிங் அசிஸ்டன்ட் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 40 வயதுக்கு உட்பட்டோருக்கு பணி வாய்ப்பு உள்ளது.

எம்.டெக்., எம்.எஸ்சி. (ஜியோ இன்பர்மேடிக்ஸ், ஜி.ஐ.எஸ்., ஸ்பாசியல் இன்பர்மேசன் டெக்னாலஜி, ஆர்.எஸ்.) மற்றும் பி.டெக், பி.இ. (ஜியோ இன்பர்மேடிக்ஸ், சி.எஸ்சி., இ.சி.இ., சிவில்) படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் சில பணிகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை
www.nird.org.in
என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 18-3-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பெட்ரோலிய நிறுவனம் :

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கீழ் செயல்படும் மங்களூர் ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல் லிமிடெட் (எம்.ஆர்.பி.எல்.) எனப்படும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தில் தற்போது லேப் சூப்பிரவைசர், என்ஜினீயர், எக்சிகியூட்டிவ் (நிதி, இன்டனல் ஆடிட்) போன்ற பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, பாலிமர் கெமிஸ்ட்ரி, பெட்ரோலியம் கெமிஸ்ட்ரி, என்விரான்மென்டல் சயின்ஸ், என்விரான்மென்டல் கெமிஸ்ட்ரி மற்றும் பயர்சேப்டி என்ஜினீயரிங், சி.ஏ., எம்.பி.ஏ. (நிதி) படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை
www.mrpl.co.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கண்டோன்மென்ட் போர்டு :

புனே கண்டோன்மென்ட் போர்டில் உதவி மருத்துவ அதிகாரி, ஜூனியர் என்ஜினீயர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், ஸ்டாப் நர்ஸ், டிரைவர், டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க், ஆசிரியர் மற்றும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 77 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 7-4-2018-ந் தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பி.ஏ., பிஎஸ்சி. படிப்புகள், எம்.பி.பி.எஸ்., டிப்ளமோ என்ஜினீயரிங், பிளஸ்-2, 10-ம் வகுப்பு படித்தவர்கள் என பலதரப்பட்ட படிப்பு முடித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 7-4-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை
http://www.punecantonmentboard.org/
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

அணுசக்தி கழகம் :

தேசிய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி (ஸ்பெசலிஸ்ட், ஜெனரல் டியூட்டி) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். முதுநிலை மருத்துவ படிப்புடன் போதிய பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை
www.npcilcareers.co.in
, www.npcil.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 19-4-2018-ந் தேதியாகும்.

ராணுவ பட்டாலியன் :

டெரிடோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவத்தின் 115-வது இன்பேன்ட்ரி பட்டாலியனில் படைவீரர், டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இதற்கான நேர்காணல் நடக்கிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் சென்று நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் 26-3-2018 முதல் 30-3-2018-ந் தேதி வரை நடைபெறுகிறது.

மற்றொரு அறிவிப்பின்படி 898 ஏ.டி. பட்டாலியனில் டிரைவர், தீயணைப்பு வீரர் போன்ற பணிகளுக்கு 23 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 25 வயதுக்கு உட்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை
https://indianarmy.nic.in/index.aspx
என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, 29-3-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதேபோல 16 அம்யூனிசன் டெப்போவில் லோயர் டிவிஷன் கிளார்கள், தீயணைப்பு வீரர் போன்ற பணிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் The Commandant , 16 Field Ammunition Depot, PIN 909716, C/O 99 APO என்ற முகவரிக்குக் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு 23-2-2018-ந் தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது முழுமையான விவரங்களை அந்த இதழில் பார்க்கலாம்.

ஆராய்ச்சி மையம் :


ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) கீழ் செயல்படும் இன்டகரேட்டடு டெஸ்ட் ரேஞ்ச் என்ற ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பூர்த்தியான விண்ணப்ப நகலுடன் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் சண்டிப்பூர், ஐ.டி.ஆர். ஆராய்ச்சி மையத்தில் 28-3-2018-ந் தேதி நடைபெறுகிறது.


எலக்ட்ரானிக் தொழிற்சாலை :


ராணுவத்திற்குத் தேவையான எலக்ட்ரானிக் உபகரணங்களைத் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் டெபுடி என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் இந்த பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 23 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்கள் சார்ந்த பிரிவுகளில் பி.இ., பி.டெக், படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை 14-3-2018-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்களை www.bel.co.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

மேலும் செய்திகள்