காஷ்மீரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல் 3 பேர் சிக்கினர்

காஷ்மீரில் இருந்து மும்பைக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-03-12 21:46 GMT
மும்பை,

காஷ்மீரில் இருந்து மும்பை அந்தேரி பகுதிக்கு காரில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று அங்கு சென்று குறிப்பிட்ட காரை கண்காணித்து கொண்டிருந்தனர்.

அப்போது, போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறப்பட்ட பதிவுஎண் கொண்ட கார் அந்த வழியாக வந் தது. உடனே போலீசார் அந்த காரை வழிமறித்து நிறுத்தி சோதனை போட்டனர்.

3 பேர் கைது

இந்த சோதனையின் போது, காருக்குள் இருந்த ஒரு ரகசிய அறைக்குள் ‘சரஸ்’ என்ற போதைப்பொருள் பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 19 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.2 கோடி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் டிரைவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அங்கு போதைப்பொருளை வாங்க வந்த 32 மற்றும் 44 வயதுடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

பேதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்