குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட பெண்கள்

குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலரை பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையத்தை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-03-12 21:15 GMT

அவினாசி,

அவினாசி ஒன்றியம் பொங்கலூர் ஊராட்சி தாசராபாளையத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனை முற்றுகையிட்டனர்.

 இதுகுறித்து பெண்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் இன்றி நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பல முறை முறையிட்டும் அவர்கள் குடிநீருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றக்கோரி இங்கு வந்துள்ளோம் என்றனர். இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் முறையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் கூறியதை அடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்