மொடக்குறிச்சியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
மொடக்குறிச்சி,
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்நிலைப்பணியாளர் இடங்களை நிரப்பக்கோரி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மொடக்குறிச்சி வட்டக்கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி முருகன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பூபதி, சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் அருள்மாணிக்கம், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.