திண்டல் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு திண்டலில் உள்ள பொது சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு திண்டலில் உள்ள பொது சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் 50–க்கு மேற்பட்ட ஆரம்ப சுகதார நிலைய துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.