குரங்கணி மலை தீ விபத்தில் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன பெண் மேலாளர் பலி
குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன பெண் மேலாளர் உயிரிழந்தார்.;
பொம்மிடி,
சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் தமிழ்மொழி. இவருடைய மகள் நிஷா (வயது 30). திருமணம் ஆகவில்லை. இவர் எம்.டெக்.,எம்.எஸ்., முடித்து சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். தமிழ்மொழியின் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஆகும்.
அவர் தனது குடும்பத்தினருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வேளச்சேரியில் குடியேறிவிட்டார். நிஷா ஆண்டுதோறும் மலையேறும் பயிற்சிக்கு செல்வது வழக்கம்.
சோகம்
இந்த நிலையில் நிஷா தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்காக சென்றார். அப்போது மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடல் பாப்பிரெட்டிப்பட்டிக்கு ஆம்புலன்ஸ் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டு வரப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நிஷாவின் உடல் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற நிஷா தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.