குரங்கணி தீவிபத்து மனதை பிழியும் சோகம்: நடிகா் கமல்ஹாசன்
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து மனதை பிழியும் சோகம் என்று நடிகா் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ForestFire
சென்னை,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும்.
இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததது.
இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய அனுதாபங்களை தெரிவித்துள்ளார். அவா் பேசியதாவது,
“முதலில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வணக்கங்கள் ” என்றார்.
பின்னா் குரங்கணி தீவிபத்து மனதை பிழியும் சோகமாகும், உயிர் பிழைத்தவா்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இறந்தவா்களின் உற்றார் உறவினா்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் . என்று தன்னுடைய இரங்களை தெரிவித்தார்.