மூலக்கொத்தளம் மயானம் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு: ம.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்பு

மூலக்கொத்தளம் மயானம் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்கும் என முத்தரசன் அறிக்கைவிடுத்துள்ளார்.

Update: 2018-03-12 22:45 GMT
சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மூலக்கொத்தளம் மயானத்தை அகற்ற மாநில அரசும் சென்னை மாநகராட்சியும் திட்டமிட்டுள்ளது கண்டனத்திற்குரியது. 20 ஏக்கர் பரப்பளவில் கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மயானத்தை அகற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?. யாருடைய நலன்களுக்காக இத்தகைய செயலில் அரசும், மாநகராட்சியும் ஈடுபட்டுள்ளன என்பது வெளிப்படையாக தெரிய வேண்டும்.

மயானம் பாதுகாக்கப்பட வேண்டும், அகற்றக்கூடாது என்று வரும் 13-3-2018 அன்று (இன்று) ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்கும்.

மாநில அரசும், மாநகராட்சியும் மயானம் அகற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்