குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம்

உள்ளாட்சி பணியாளர்கள் சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-03-12 22:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பணியாளர்கள் சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். கடந்த ஆண்டும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்ய ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்தனர். இதனை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. ஆனால் இன்றளவும் ஊதியம் நிர்ணயம் செய்யவில்லை என்று போராட்டத்தின்போது அவர்கள் கூறினர். போராட்டத்திற்கு வீரய்யா தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் வாசுகி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட தலைவர் கார்த்திகைநாதன், துணைத்தலைவர் அண்ணாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்