2-ம் கட்டமாக 4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூரில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 4 லட்சத்து 4 ஆயிரத்து 486 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. வேலூரில் நடந்த முகாமை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து 2 தவணைகளாக அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி நடந்தது.
இந்த நிலையில் 2-ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்க 2,371 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 4 லட்சத்து 4 ஆயிரத்து 486 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
வேலூர் நேதாஜி மைதானத்தில் கலெக்டர் ராமன் குழந்தை ஒன்றுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில், சுகாதார பணிகள் இணை இயக்குனர் சுரேஷ், மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், ஜனனீ சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடிகள், பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப்பகுதிகளிலும், பிற மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக வேலூர் மாவட்டத்தில் தங்கி கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், சாலை விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியோருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போலியோ சொட்டு மருந்து வழங்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான சொட்டு மருந்துகளை எடுத்து செல்வதற்கும் மாவட்டம் முழுவதும் 140 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது.
இப்பணியில் பொது சுகாதாரத்துறை, கல்வித்துறை சமூகநலத்துறை, வருவாய்துறை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 8 ஆயிரத்து 324 பணியாளர்களும், 274 மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டனர்.