கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும்
பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.
பெங்களூரு,
பா.ஜனதா சார்பில் பெங்களூருவை பாதுகாப்போம் என்ற பெயரில் பாதயாத்திரை பெங்களூரு பொம்மனஹள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் பெங்களூரு நகரம் பாதுகாப்பாக இல்லை. இங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. போலீஸ் அதிகாரிகளின் மனைவிமார்களின் தங்க தாலிக்கொடி பறிக்கப்படுகிறது. இதுவே இந்த மாநிலத்தின் உண்மையை எடுத்து சொல்கிறது. பா.ஜனதா கட்சியால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை சரியாக பராமரிக்க முடியும். கொள்ளை சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்.
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி மலர காங்கிரஸ் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். மக்களுக்கு இதுவே சரியான தருணம். காங்கிரஸ் அரசு மக்களுக்கு விரோதமான ஆட்சியை நடத்துகிறது. வளர்ச்சியில் பா.ஜனதா புரட்சி செய்துள்ளது. நாட்டை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4, 5 தலைமுறை ஆட்சி செய்துள்ளது. ஆனால் சொல்லும்படி எந்த வளர்ச்சியும் நாட்டில் ஏற்படவில்லை.
பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் வளர்ச்சி புரட்சியே ஏற்பட்டுள்ளது. அனைத்து நிலையிலும் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இஸ்லாமிய பெண்களின் நலனை காக்க மத்திய அரசு முத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்ய மசோதா கொண்டு வந்தது. அதை காங்கிரஸ் எதிர்த்தது. காங்கிரசின் இந்த மனநிலை கடும் கண்டனத்திற்குரியது.
ஆயத்த ஆடை தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அனைத்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான தொல்லைகளை தெரிவிக்க புகார் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பிரதமர் மோடி மாற்றுவார் என்ற நம்பிக்கை சாமானிய மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அமேதி பாராளுமன்ற தொகுதியில் ரெயில்வே திட்டம் ஒன்று அமல்படுத்தப்படும் என்று நேருவால் உறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மோடி பிரதமரான பிறகு அந்த திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு ஸ்மிரிதி இரானி பேசினார்.