‘நடிகர் இர்பான் கான் உடல்நிலை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்’
நடிகர் இர்பான் கான் உடல்நிலை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை,
மும்பையை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். இவர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது நடிகர் இர்பான் கானின் குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இர்பானின் கானின் மனைவி சுபாதா சிக்தார் ‘பேஸ்புக்’கில் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார்.
அதில், ‘தனது கணவரின் உடல்நிலை பற்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.