மாவட்டத்தில் போலீஸ், தீயணைப்புபடை வீரர்கள் சேர்க்கைக்கான எழுத்து தேர்வு 4,750 பேர் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த போலீஸ் மற்றும் தீயணைப்புபடை வீரர்கள் சேர்க்கைக்கான எழுத்து தேர்வை 4,750 பேர் எழுதினர்.
நாமக்கல்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சேர்க்கைக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இத்தேர்வை எழுத 4,966 ஆண்கள், 501 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 5,469 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் 649 ஆண்கள், 70 பெண்கள் என மொத்தம் 719 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 4,750 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பம் செய்து இருந்த நபர்கள் தேர்வு மையத்திற்கு வர ஏதுவாக நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டது.
தேர்வு கூடத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த தேர்வை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (பயிற்சி) அறிவு செல்வம், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.